Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈஸ்டர் பண்டிகைக்கான நற்செய்தியை தெரிவித்தார் கென்டர்பர்ரி பேராயர்

In
Published: 09:35 GMT, Apr 17, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Sylviya

பிரித்தானியாவின் கென்டர்பர்ரி பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby), ஈஸ்டர் பண்டிகைக்கான நற்செய்தியை தெரிவித்துள்ளார்.

யேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததன் பின்னர் மூன்று நாட்களின் பின் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்நாளே உயிர்ப்பு ஞாயிறு அல்லது ஈஸ்டர் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் கென்டர்பர்ரி தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வின் பின்னரே பேராயர் ஜஸ்டின் குறித்த நற்செய்தியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், எகிப்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அலெக்ஸான்றியா (Alexandria) மற்றும் டன்டா (Tanta) ஆகிய பகுதிகளில் உயிரிழந்த மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும் பேராயர் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

எகிப்தின் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த பேராயர், “எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்கள் குண்டுகள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

எகிப்தில் உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg