Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசத்துரோக வழக்கு: வைகோவின் நீதிமன்ற காவல் நீடிப்பு

In இந்தியா
Updated: 10:17 GMT, Apr 17, 2017 | Published: 09:24 GMT, Apr 17, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Shailu
vaiko

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது விசாரணையை முன்னெடுத்த நீதிபதி, எதிர்வரும் 27ஆம் திகதி வரை வைகோவை தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg