Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தான் நாட்டவர்களுக்கான விசா வழங்கும் பணிகள் நிறுத்தம்! – மத்திய அரசு

In இந்தியா
Updated: 10:28 GMT, Apr 17, 2017 | Published: 10:06 GMT, Apr 17, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Shailu
flags

பாகிஸ்தான் நாட்டவர்களுக்கான விசா வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மருத்துவ சிகிச்சைக்காக விசா கோருவோரின் விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு ஜாதவை காப்பாற்றும் முயற்சியாக தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறும், அவரது தீர்ப்பின் நகலை தங்களுக்கு அனுப்புமாறும் கோரிக்கைகளை முன்வைத்தது.

ஆனால், குறித்த விவகாரத்தில் பாகிஸ்தான் எந்த பதிலையும் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg