Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’

In சினிமா
Updated: 10:41 GMT, Apr 17, 2017 | Published: 10:17 GMT, Apr 17, 2017 |
0 Comments
1159
This post was written by : Vithushagan
idam_2616233f

மீண்டும் விஜய் சேதுபதியை நாயகனாக்கி ‘மாமனிதன்’ படத்தை இயக்கவுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தை இசையமைப்பாளர்  யுவன் தயாரிக்கவுள்ளார்.

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய  சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி, தற்போது நான்காவது முறையாக மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு ‘மாமனிதன்’ என்ற கதையை எழுதத் தொடங்கினார் சீனு ராமசாமி. பல்வேறு முன்னணி நடிகர்களிடம் அக்கதையைத் தெரிவித்தார். ஆனால், படம் தள்ளிக் கொண்டே சென்றது. இறுதியாக விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கவே, அவர் நடிப்பதாக உறுதியளித்தார்.

இக்கூட்டணி இணைப்பில் உருவாகும் ‘மாமனிதன்’ படத்தை தயாரிக்கவுள்ளார் இசையமைப்பாளர் யுவன். ஏற்கனவே நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை தயாரித்து வருகிறார் யுவன்.

தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சீனு ராமசாமி. கதையை முழுமையாக முடித்தவுடன் நாயகி மற்றும் இதர நடிகர்கள் ஆகியோரை தெரிவு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg