Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனதைரியம் இருந்தால் இலகுவாக வெற்றி பெற முடியும்: அஷிஸ் நெஹரா

In கிாிக்கட்
Updated: 10:49 GMT, Apr 17, 2017 | Published: 10:38 GMT, Apr 17, 2017 |
0 Comments
1096
This post was written by : Surenth
ashishnehral

விளையாட்டில் மனதைரியமும் சிறந்த மனநிலையும் இருந்தால் இலகுவாக வெற்றி பெற முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஸ் நெஹரா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி வரும் அஷிஸ் நெஹரா  38 வயதை கடந்துள்ளார். அத்தோடு, 12 சத்திர சிகிச்சைகளுக்கு முகம் கொடுத்த பின்னரும் சிறந்த முறையில் தன்னால் விளையாட முடிகிறது என்றால் அதற்கு தனது மன தைரியமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னால் முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் எனவும் அவ்வாறான ஒரு மனநிலையை அனைவரும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், எவ்வளவு வயது கடந்தாலும் இளைய வீரர்களுக்கு ஈடுகொடுப்பதற்கு எம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அஷிஸ் நெஹரா குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg