Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

In
Published: 11:22 GMT, Apr 17, 2017 |
0 Comments
1283

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)