Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜோடி இல்லாத படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

In சினிமா
Updated: 12:07 GMT, Apr 17, 2017 | Published: 11:25 GMT, Apr 17, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Shailu
Vijay Sethupathi

பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 25வது படம் ‘சீதக்காதி’. இப் படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்தும் விஜய் சேதுபதியின் பாத்திரம் குறித்தும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் அவர் ‘சீதக்காதி’ படத்தில் விஜய்சேதுபதியின் பாத்திரத்தின் பெயர் ‘அய்யா’ என்றும் இப் படத்தில் அவர் ஒரு நடிகராகவே நடிக்கவுள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஷ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூறும் படம்தான் ‘சீதக்காதி’. இப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியே இல்லை. அதனால் அவருக்கு காதல் காட்சிகளும் இல்லை என்றும் பாலாஜி கூறியுள்ளார்.

மேலும், இப் படத்தில் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பிரபல நடிகைகளும்,  தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனரான மௌலி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg