Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தக்காளி இடியப்பம்

In
Updated: 12:27 GMT, Apr 17, 2017 | Published: 12:26 GMT, Apr 17, 2017 |
0 Comments
1166
This post was written by : Shailu
Tomato

தேவையான பொருட்கள்

சேமியா/ இடியப்பம் – 1 பாக்கெட்
வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி/மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடானதும், அதில் ரெடிமேட் இடியப்பத்தைப் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில்  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.  தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியப்பத்தை போட்டு நன்கு பிரட்டவும். கடைசியாக அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியப்பம் ரெடி!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg