Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி யாழ். ஆயரால் திறந்துவைக்கப்பட்டது

In இலங்கை
Updated: 13:34 GMT, Apr 17, 2017 | Published: 13:34 GMT, Apr 17, 2017 |
0 Comments
1177
This post was written by : Vithushagan

ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலய வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதியை, யாழ். ஆயர் பேனாட் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை திறந்துவைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தினமாகிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆயரினால் இலங்கை கடற்படை தளபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, கடற்படையினரால் கடந்த மாத இறுதிப் பகுதியில் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அமைக்கப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடபகுதி கடற்படை கட்டளை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகள், குருமார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

unnamed (11)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg