Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம்

In இலங்கை
Updated: 18:04 GMT, Apr 17, 2017 | Published: 18:04 GMT, Apr 17, 2017 |
0 Comments
1095
This post was written by : Vithushagan

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின்  கல்வி மேம்பாட்டு பேரவை, இன்றைய தினம் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) மேற்படி கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைவரும் வடக்கு மாகாண ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளருமான வ.செல்வராசா தலைமை தாங்கி நடத்தினார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல்துறை விரிவுரையாளர் ச.சு.சிவகுமார் கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் கலந்துகொண்டார்.

இதேபோல் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் மற்றும் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் விளையாட்டு, கலைதுறை ஆகியவற்றில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தின் சகல வலயங்களிலும் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக குறித்த தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (7)unnamed (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg