Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை மக்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையினை பெற்றுக் கொடுப்போம்: ரணில்

In இலங்கை
Published: 02:06 GMT, Apr 18, 2017 |
0 Comments
1332
icon_com
This post was written by : Surenth
aranil-wickramasinghe-03

வியட்நாம் மக்கள் அனுபவிக்கும் சிறந்த வாழ்க்கை முறையினைப் போன்று இலங்கை மக்களுக்கும் சிறந்த வாழ்க்கை முறையினை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணிலுக்கும், வியட்நாம் பிரதமருக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 30 ஆண்டுகால யுத்தத்திற்கு பின்னர் வியட்நாம் துரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் வியட்நாமை முன்னுதாரணமாக கொண்டு நாமும் எமது நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

அந்தவகையில், வியட்நாமுடன் இணைந்து புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த சந்திப்பின் போது இரு நாட்டுக்கும் இடையில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg