Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது: சம்பந்தன்

In இலங்கை
Published: 03:00 GMT, Apr 18, 2017 |
0 Comments
1294
This post was written by : Surenth
Maithri - Ranil

நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அதன் காரணமாகவே பல்வேறு போராட்டங்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசு எந்த ஒரு முன்னேற்றத்தையும் அடையவில்லை என அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

மேலும், மக்களின் விருப்பத்தை மீறி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தாம் செயற்பட தயார் இல்லை எனவும் எந்த ஒரு விடயத்தை முன்னெடுப்பதாக இருந்தாலும் தமிழ் மக்களின் விருப்பத்துடனேயே முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg