Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டங்களில் பங்கேற்க ஸ்ரீனிவாசனுக்கு தடை!

In விளையாட்டு
Updated: 04:21 GMT, Apr 18, 2017 | Published: 04:08 GMT, Apr 18, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Risha
Srini

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டங்களில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தொடர்பில் பி.சி.சி.ஐ.யின் நிர்வாக குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதிகளாக பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகத்தில் பொறுப்பு வகித்த தகுதியற்றவர்களை சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டங்களில் பங்கேற்பதற்கு பரிந்துரைக்க முடியாது என்று கடந்த 10ஆம் திகதி விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

ஐ.பி.எல். சர்ச்சை காரணமாக ஸ்ரீனிவாசனுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியை இழக்க நேரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg