Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சி வெற்றியளிக்க வேண்டும்: வியட்நாம்

In இலங்கை
Updated: 04:11 GMT, Apr 18, 2017 | Published: 04:11 GMT, Apr 18, 2017 |
0 Comments
1166
This post was written by : Surenth

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூங் தெரிவித்துள்ளார்.

வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர்  இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எமது மக்கள் மீதும் எமது தேசம் மீது இலங்கை காட்டி வரும் நட்புறவிற்கும் நல்லிணக்கத்திற்கும் எமது நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்து சமுத்திரத்தின் முத்தாக இலங்கை கருதப்படுவதனால், மிகவும் சக்திவாய்ந்ததும் பலம் கொண்டதுமான ஒரு நாடாக காணப்படுகின்றது.

இந்நிலையில் எரிபொருள், எரிவாயு, உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்பம், ஆடை உற்பத்தி, விவசாயம், கடற்தொழில் போன்ற துறைகளில் இரு நாட்டுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுகின்றது.

அத்துடன் புதுப்பிக்கப்பட்ட சக்தி வளம், விமான சேவைகள், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளிலும் இலங்கையுடனான உறவை அதிகரித்துக் கொள்ள உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” எனவும் வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூ தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg