Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி

In
Updated: 04:42 GMT, Apr 18, 2017 | Published: 04:42 GMT, Apr 18, 2017 |
0 Comments
1300
This post was written by : Sylviya

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தென்கொரியாவுக்கான தனது விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கிருந்து ஜப்பானை நோக்கி பயணமாகவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது அவர் ஜப்பானின் துணைப் பிரதமர் டாரோ ஆசோவை (Taro Aso) நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை ஜப்பான் வர்த்தகத்தில் இணைத்துக்கொள்வது மற்றும் அமெரிக்காவில் ஜப்பானிய உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க முதலீடு செய்வது ஆகியன தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

மைக் பென்ஸின் ஆசிய நாடுகளுக்கான 10 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது அவர் நான்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg