Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க-வின் இரு அணிகளையும் இணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 04:46 GMT, Apr 18, 2017 | Published: 04:37 GMT, Apr 18, 2017 |
0 Comments
1209
This post was written by : Shailu

அ.தி.மு.க-வின் இரு அணிகளையும் இணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டில் நேற்றிரவு (திங்கட்கிழமை) 9 மணியளவில் சுமார் 25இற்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள் கூடி ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இக் கூட்டத்தில் இரண்டு விடயங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. முதலாவதாக தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இரண்டாவது, அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவதே எங்களது முக்கிய குறிக்கோள். அந்தவகையில்,  சகல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாகவே இருக்கின்றனர் என்ற ஓ.பி.எஸ். இன்  கருத்தை வரவேற்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg