Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இன்புளுவென்ஸா தொற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறை தவறிவிட்டது: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

In இலங்கை
Updated: 06:12 GMT, Apr 18, 2017 | Published: 05:12 GMT, Apr 18, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Surenth
H1N1

இன்புளுவென்ஸா தொற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அச் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்,  அதனைத் தடுக்க வேண்டிய கடமை சுகாதார அமைச்சுக்கு உள்ளது. எனினும் அதனை நிறைவேற்ற சுகாதார அமைச்சு தவறிவிட்டது என நவீன் டி சொய்ஸா மேலும்  தெரிவித்தார்.

இந் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மருந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுகாதார அமைச்சர் என்ற வகையில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg