Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தி.மு.க-வின் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க முடியாது: வெள்ளையன் அறிவிப்பு

In இந்தியா
Updated: 06:06 GMT, Apr 18, 2017 | Published: 05:06 GMT, Apr 18, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Shailu
vellaiyan

தமிழகத்தில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைக்காக தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், கடந்த 3ஆம் திகதி உழவர்களுக்காக கடையடைப்பில் ஈடுபட்டதோடு, எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளதால் இடைப்பட்ட நாளான 25ஆம் திகதி மற்றுமொரு கடையடைப்பில் ஈடுபட முடியாதென வெள்ளையன் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, இவ்விடயங்களை குறிப்பிட்டு வெள்ளையன் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

எவ்வாறாயினும் விவசாயிகளுக்கு தமது தார்மீக ஆதரவை தெரிவிக்கும் விதத்தில், மாவட்ட தலைநகரங்களில் தமது பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவற்றில் பெருந்திரளான வணிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் வெள்ளையன் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg