Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தீர்வின்றி தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்

In
Updated: 05:33 GMT, Apr 18, 2017 | Published: 05:27 GMT, Apr 18, 2017 |
0 Comments
1156
This post was written by : Varshini
kepapilavu

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலை குறித்து வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி தொடர்கின்றது.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டதோடு, குறித்த காணிகளுக்குச் சொந்தமான மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற மாதிரிக் கிராமங்களில் குடியேற்றப்பட்டனர்.

அங்கு இம் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமது பூர்வீக காணிகளை ஒப்படைக்குமாறு ஆரம்பித்த இப் போராட்டம் 48ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.

அத்தோடு, காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதோடு, அவர்களை மீட்டுத் தரவேண்டுமென கோரிக்கை விடுத்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43ஆவது நாளை எட்டியுள்ளது.

இத்தனை நாட்களாக வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் சொந்த நிலத்திற்காகவும், தொலைத்த உறவுகளுக்காகவும் போராடும் தமது உணர்வுகளை அரசாங்கமோ சம்பந்தப்பட்ட தரப்பினரோ கண்டுகொள்ளாமல் இருப்பது தமது வேதனையை பன்மடங்காக அதிகரித்துள்ளதென இம் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.