Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு – காஷ்மீரில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன

In இந்தியா
Updated: 06:18 GMT, Apr 18, 2017 | Published: 06:18 GMT, Apr 18, 2017 |
0 Comments
1164
This post was written by : Shailu

ஜம்மு – காஷ்மீரில் மேல்நிலைப்பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் ஆகியன மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பல இடங்களில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதை தொடர்ந்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இணையசேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தெற்கு காஷ்மீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில், கடந்த 15ஆம் திகதியன்று மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், பல மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜம்மு, ஸ்ரீநகர், கன்டேர்பால், பாரமுல்லா, சோபியான் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மாணவர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg