Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தென்கொரியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும்: மைக் பென்ஸ்

In
Published: 06:23 GMT, Apr 18, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Sylviya

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் உள்ள ஐந்து வருடங்கள் பழமை வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து அதனை சீர்திருத்தவுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வணிக தலைவர்களுடனான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தகம் உருவாக்கப்பட்ட நாள் முதல், அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளதாகவும் தென்கொரியாவில் அமெரிக்க வணிகங்களை நடத்திச் செல்வதற்கான தடைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மைக் பென்ஸின் அடுத்தக்கட்ட உத்தியோகபூர்வ விஜயமாக, தென்கொரியாவிலிருந்து ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் இக் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg