Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி கருத்துக்கணிப்பின் முடிவுகள் தொடர்பில் வெள்ளை மாளிகை பேச்சாளர் கருத்து

In உலகம்
Published: 07:13 GMT, Apr 18, 2017 |
0 Comments
1353
This post was written by : Sylviya

துருக்கி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது குறித்து நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட மாட்டாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஷோன் ஸ்பைசர், “துருக்கியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச ஆணையம் ஒன்று உள்ளது. குறித்த ஆணையம் 10 தொடக்கம் 12 நாட்களுக்குள் கருத்துக்கணிப்பு முடிவுகளின் உண்மை நிலை தொடர்பில் அறிக்கை வெளியிடும். அதனால் இவ்விடயம் தொடர்பில் நாம் அமைதி காப்பதே சிறந்தது” என தெரிவித்தார்.

அத்துடன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் ட்ரம்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீன மற்றும் அமெரிக்க உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg