Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாபெரும் பொதுக்கூட்டமொன்றை நடத்த தி.மு.க. திட்டம்

In இந்தியா
Updated: 09:30 GMT, Apr 18, 2017 | Published: 07:21 GMT, Apr 18, 2017 |
0 Comments
1298
This post was written by : Shailu

அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 25ஆம் திகதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. முன்னெடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முழு அடைப்பு போராட்டம் பற்றிய விளக்கக் கூட்டமாக இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்படி குறித்த பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg