Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாள ஜனாதிபதிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு

In இந்தியா
Updated: 09:53 GMT, Apr 18, 2017 | Published: 07:47 GMT, Apr 18, 2017 |
0 Comments
1200
This post was written by : Shailu

ஐந்து நாள் அரச சுற்றுப்பயணமாக டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பாண்டரிக்கு, இன்று (செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அவரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

பின்னர் இராணுவத்தினரின் மரியாதைகளை ஏற்றுக்கொண்ட அவர், ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேபாளம் ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் பல்வேறு வர்த்தக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பாண்டரி, பிரதமர் மோடி மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்றும்  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg