Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடியை சந்தித்தார் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

In இந்தியா
Updated: 08:33 GMT, Apr 18, 2017 | Published: 08:33 GMT, Apr 18, 2017 |
0 Comments
1199
This post was written by : Shailu
modi

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான H.R. McMaster, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ள இச் சந்திப்பில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் ட்ரம்பின் ஆலோசகர் எதிர்பார்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்பின் ஆலோசகர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோருடன்  பிராந்திய உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg