Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நடாலை பின்தள்ளி நிஷிகோரி தரவரிசையில் முன்னிலை

In டெனிஸ்
Updated: 11:07 GMT, Apr 18, 2017 | Published: 08:32 GMT, Apr 18, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Risha
kei-nishikori

டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை பின்தள்ளி, ஜப்பான் வீரர் கீ நிஷிகோரி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான சங்கத்தினால் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தரவரிசைப் பட்டியலின்படி ஐந்தாவது இடத்திலிருந்த ரஃபேல் நடால் ஏழாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். எனினும், பிரித்தானியாவின் அன்டி முர்ரே தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பட்டியலின் முதல் ஐந்து இடங்களை முறையே நோவாக் ஜோகோவிச், ஸ்டான் வவ்ரிங்கா, ரொஜர் ஃபெடரர் ஆகியோர் பிடித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg