Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவரச அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் பிரதமர் தெரேசா மே

In
Published: 10:00 GMT, Apr 18, 2017 |
0 Comments
1371
This post was written by : Sylviya
10

பிரித்தானியாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை உள்ளூர் நேரப்படி 11.15 அளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  அறிக்கை எந்த விடயம் தொடர்பில் வெளியிடப்படும் என்பது தொடர்பில் டவுனிங் ஸ்ரீற் 10 ஆம் இலக்க இல்லம் இது வரை எவ்வித கருத்துக்களையும்  முன்வைக்கவில்லை.

இருப்பினும், பிரித்தானியாவில் இடைத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் குறித்த அறிக்கை வெளியிடப்படலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சட்டத்திற்கு அமைய ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், அதற்கிடையில் இடைத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அது எதிர்வரும் மே மாதத்தில் வரும் முதலாவது வியாழக்கிழமையன்று நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg