Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். தொடரை கைப்பற்றுவதற்கான போதிய திறனுடன் ஹைதராபாத் அணி உள்ளது: வோர்னர்

In விளையாட்டு
Updated: 11:45 GMT, Apr 18, 2017 | Published: 10:32 GMT, Apr 18, 2017 |
0 Comments
1188
This post was written by : Risha

ஐ.பி.எல். தொடரை கைப்பற்றும் அளவிற்கு போதிய திறனுடன் தமது அணி சிறந்து விளங்குவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித்தலைவர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் பத்தாவது ஐ.பி.எல். தொடர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ரோயல் செலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்துவதானது மாபெரும் சாதனையாகும். எனினும், கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இம்முறை போட்டியில் கூடுதல் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வீரர்களான யுவராஜ்சிங், ஷீகர் தவான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் சிறந்த பயிற்சியுடன் காணப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg