Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு மின்சக்தி அமைச்சர் திடீர் விஜயம்

In இலங்கை
Updated: 11:48 GMT, Apr 18, 2017 | Published: 10:44 GMT, Apr 18, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Ravivarman
IMG_2511

புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்துள்ளார்.

நுரைச்சோலையிலுள்ள மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சர் இவ் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இதன்போது அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

“முதலாவது மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதுடன் மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் மட்டும் தற்போது இயங்கி வருவதால் அதன் ஊடாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கி இயந்திரத்தை கூடிய விரைவில் சீர்செய்து மீண்டும் செயற்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும்  தெரிவித்தார்.

IMG_2509 IMG_2491

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg