Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொலிவூட்டில் களமிறங்கும் பிரபாஸ்

In சினிமா
Updated: 11:50 GMT, Apr 18, 2017 | Published: 10:49 GMT, Apr 18, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Shailu
prabhas

‘பாகுபலி’ புகழ் பிரபாஸை பொலிவூட்டில் நடிக்க வைக்கும் முயற்சியில் ‘பாகுபலி’ பட இணை தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தரான கரண் ஜோஹர் ஈடுபட்டுள்ளார்.

பிரபாஸிற்காக காதல் கலந்த ஆக்ஷன் கதையை தயார் செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர்,   ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து ஹிந்தியில் படம் இயக்க வேண்டும் என எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து கரண் ஜோஹர் கருத்து தெரிவிக்கையில், “திரையுலகில் அறிமுகமாகி 14ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்திற்காக தீவிரமாக பணியாற்றினார்.

‘பாகுபலி’ முதல் பாகம் வெளியானபோதே பிரபாசுக்கு பொலிவுட்டின் பல்வேறு பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் வந்த நிலையில், பாகுபலிக்காக அவற்றை மறுத்துள்ளார்.

தற்போது இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், பிரபாஸ் தனது அடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். பிரபாஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்கவுள்ள நிலையில், அதனை முடித்த பிறகு பொலிவூட், தமிழ், திரைப்படங்களில் நடிப்பது பற்றி ஆலோசிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg