Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை கைது!

In இந்தியா
Updated: 04:38 GMT, Apr 19, 2017 | Published: 11:40 GMT, Apr 18, 2017 |
0 Comments
3862
icon_com
This post was written by : Shailu
tamilisai

மதுபான கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை மறியல் மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இதில் கலந்துகொண்ட பெண்கள் கைகளில் தாலிக் கயிற்றைக் கட்டிக்கொண்டும், கழுத்தில் போத்தல்களை மாலைகளாக அணிந்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குறித்த போத்தல்களை மதுபான கடைகளுக்கு முன்பு உடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து,  தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 100 பேர் வரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg