Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறன்ரோ நகரில் வீடுகளின் சந்தை நிலவரம் குறித்து நிதியமைச்சர் பேச்சு

In கனடா
Updated: 12:18 GMT, Apr 18, 2017 | Published: 11:44 GMT, Apr 18, 2017 |
0 Comments
1149
This post was written by : Risha

கனடாவில் மக்கள் செறிவாக வாழும் ரொறன்ரோ நகரில் வீடுகளின் சந்தை நிலவரம் குறித்து கலந்துரையாடும் வகையில், மத்திய நிதியமைச்சர் ஒன்ராறியோ நிதியமைச்சர் மற்றும் ரொறன்ரோ மேயர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் பிரபலமான நகரங்களில் வீடுகளின் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டு வருகின்றது. அதனால், மாகாண அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இன்றைய பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைவரும் கட்டுப்படியாகும் விலைக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் ஆராயவுள்ளதாக ஒன்ராறியோ நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg