Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையிலான உறவில் நிச்சயமற்ற தன்மை

In ஐரோப்பா
Updated: 12:19 GMT, Apr 18, 2017 | Published: 11:52 GMT, Apr 18, 2017 |
0 Comments
1291
This post was written by : Sylviya
13

துருக்கி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அண்மையில் நடைபெற்ற  கருத்துக்கணிப்பில் தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் உள்ள உறவுகளில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்படுவது குறித்து ஐரோப்பிய நாடுகள் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் குழப்பமான சூழ்நிலைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த துருக்கி பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியர் ஒருவர், “துருக்கியின் கருத்துக்கணிப்பு முடிவை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்காவிடிலும், குடியேற்றவாசிகள் விடயத்தை கையாள்வது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும். இனிவருங்காலங்களில் அதிகரிக்கும் குடியேற்றவாசிகள் பிரச்சினையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொள்ள நேரிடலாம்” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு செல்லும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டமையை கருத்திற்கொண்டே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg