Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வடசென்னை’ படத்திலிருந்து அமலாபால் விலகல்

In சினிமா
Updated: 12:44 GMT, Apr 18, 2017 | Published: 12:11 GMT, Apr 18, 2017 |
0 Comments
1325
icon_com
This post was written by : Shailu
amala paul

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இப்படத்தில் ஒப்பந்தமான நடிகை சமந்தா விலகியதையடுத்து அமலாபால் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியானதோடு, தான் இப்படத்திலிருந்து விலகவில்லை என்பதை அமலாபால் உறுதியாக தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், மீண்டும் அமலாபால் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதோடு, கோல்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கெனவே, இப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg