Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

வறுமையை காரணம் காட்டி கையேந்தக் கூடாது: எஸ்.ராஜ்பாபு

In இலங்கை
Updated: 12:38 GMT, Apr 18, 2017 | Published: 12:38 GMT, Apr 18, 2017 |
0 Comments
1066
This post was written by : Shailu
1

வறுமையை காரணம் காட்டி தொடர்ந்து கையேந்தி வழக்கத்தைக் கைவிட வேண்டும் என மட்டக்களப்பு வவுணதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள இரு சமுர்த்தி வங்கிகளிலும் சித்திரைப் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் விஷேட நிகழ்வு ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜ்பாபு சமுர்த்தி பயனாளிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘சமுர்த்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பயனாளிகள், தமது பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சமுர்த்தி வங்கியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமுர்த்தி திட்டமும், வங்கிகளும் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காகவே அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது

மக்களின் வறுமை ஒழிப்புக்காக அரசாங்கம் பல வழிவகைகளை ஏற்படுத்தித் தந்துள்ள நிலையில், அவற்றைப் பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்தக் கொள்ள வேண்டும்.

பல மில்லியன் ரூபா செலவில் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அரசாங்கமும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

வறுமை என்பது எவருக்கும் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு மனிதனிலும் நம்பிக்கையும், விடா முயற்சியும் உறுதியாக இருந்தால் வறுமையிலிருந்து விடுபட்டு சுபிட்சமான வாழ்வினை பெறமுடியும்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2
3

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.