Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் தவறிவிட்டார்: நவீன் டி சொய்ஸா

In இலங்கை
Published: 13:01 GMT, Apr 18, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Ravivarman
rajitha

நாட்டின் பல பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் தவறிவிட்டார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.  இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த வைரஸ் தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சுகாதார அமைச்சர் என்ற வகையில் ராஜித சேனாரத்ன, இந்த அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எனவே தட்டுப்பாடு நிலவுகிற வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் உடனடியாக அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நவீன் டி சொய்ஸா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg