Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மஹேந்திரனிடம் மீண்டும் விசாரணை

In இலங்கை
Published: 14:43 GMT, Apr 18, 2017 |
0 Comments
1215
This post was written by : Ravivarman
asa

மீண்டும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனிடம் சாட்சிகள் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விரைவில் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியிலுள்ள இன்னும் இரு அதிகாரிகள் சாட்சிக்காக அழைக்கப்படவுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளதனால், முன்னாள் அதிகாரியொருவரிடம் முதலில் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களிடம் சாட்சிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் அழைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்தமுறை மத்தியவங்கி பிணைமுறி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரிடத்தில் நான்கு மணிநேரத்துக்கு அதிகமாக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg