Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டு. வேலையற்ற பட்டதாரிகளால் மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு அஞ்சலி

In இலங்கை
Updated: 15:12 GMT, Apr 18, 2017 | Published: 15:12 GMT, Apr 18, 2017 |
0 Comments
1231
This post was written by : Ravivarman

சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

காந்தி பூங்கா முன்பாக 57 ஆவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையிலேயே மேற்படி அஞ்சலி நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில்,  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிருஷாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இரு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பட்டதாரிகளினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதில் தாமதநிலை காணப்படுமானால் அவர்களுக்கு ஆதரவாகவும் எமது போராட்டங்கள் இடம்பெறும் என பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

mee1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg