Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 15:49 GMT, Apr 18, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Sivaguru Siva
170418150519-07-theresa-may-0418-overlay-tease

பிரித்தானியாவில் எதிர்வரும் யூன் 8 ஆந்திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுமென பிரதமர் திரேசாமே இன்று அதிரடியாக அறிவித்தமை பிரித்தானிய அரசியல் கட்சிகளிடம் தேர்தல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இருந்தாலும் திரேசாமேயின் இன்றைய திடீர் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

european-union-l-reu

பிரித்தானியாவில் எதிர்வரும் யூன் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட இருந்தாலும் பிரெக்ஸிற் நகர்வுகள் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் திட்டமிட்டப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி முன்னெடுக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது

நாளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக்கருத்து வெளிவந்துள்ளது.

_89658609_gettyimages-455470439

ஸ்கொட்லாண்ட் காவற்துறையினரால் லண்டனில் இன்று கைது செய்யப்பட்ட இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் கிங்ஃபிசர் விமான சேவை நிறுவனத்தின் அதிபருமான விஜய் மல்லையா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்

இன்று மாலை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டபோது அவருக்கு பிணைவழங்கப்பட்டள்ளது

இந்திய வங்கிகளுக்கு 9000 கோடி ரூபாய் செலுத்த தவறிய குற்றத்தின் அடிப்படையில் விஜய் மல்லையாவை மல்லையாவை கைதுசெய்து நாடுகடத்தும்படி  பிரித்தானியாவிடம் இந்தியா கோரியமை குறிப்பிடத்தக்கது

_95689650_mediaitem95689647

ரஸ்யாவின் சென்ற்பீற்றேர்ஸ் நகர குண்டுத்தாக்குதல் தொடர்பாக கைது செய்யபட்ட கிறிகிஸ்தானை சேர்ந்த சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது தனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளின் படி மட்டும் தான் செயலாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்

தான் செய்த நடவடிக்கைகளின் பின்விளைவுகள் குறித்து தான் அறிந்திருக்கவி;ல்லையெனவும் அவர் கூறினார்.

சென்ற் பீற்றேர்ஸ் நகரில் சேவையில் ஈடுபட்ட நிலக்கீழ் தொடருந்தில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லபட்டு 50 பேர் காயமடைந்திருந்தனர்.

australian-457-visa-qualify1

ஒஸ்ரேலியாவில் இதுவரை வெளிநாட்டுப் பணியாளர்கள் பயன்படுத்திய சிறப்பு விசாதிட்டம் (457 விசா திட்டம்) மீளெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஒஸ்ரேலியாவின் இந்தஅறிவிப்பு காரணமாக இதுவரை சிறப்பு விசா திட்டத்தை பயன்படுத்தி பணியாற்றி வரும் வெளிநாட்டுப் பணியாளர்கள் 95,000 பேர் பாதிக்கப்படலாமென எதிர்பார்கப்படுகிறது

ஒஸ்ரேலியாவில் நிலவிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் வகையில் வேலைவாய்ப்புகளில் ஒஸ்ரேலியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg