Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் மீன்பிடி இடங்களை அடையாளப்படுத்துவதில் முறுகல்நிலை

In இலங்கை
Published: 16:25 GMT, Apr 18, 2017 |
0 Comments
1315
This post was written by : Ravivarman
mullai3

கொக்குளாய் பகுதியில் கரைவலைப்பாடுகளை பிரித்துக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானபோது சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்கிழமை) முறுகல் நிலை  ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத்தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இது தொடர்பான விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கரைவலைப்பாட்டை அளவிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது ஏற்கனவே, தமது வசமுள்ள தலைப்பாடு என்ற பகுதியில் இருந்து கரைவலைப்பாட்டுக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சிங்கள மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும், தமிழ் மீனவர்கள் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்ததைத் தொடர்ந்தே குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த அளவீட்டுப் பணிகளின் போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணிப்பகுதி அதிகாரிகள், முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

mullai2 mullai1

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.