Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது பெங்களூர் அணி

In கிாிக்கட்
Updated: 06:35 GMT, Apr 19, 2017 | Published: 05:56 GMT, Apr 19, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Elakkiya
261750

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தொடரின் 20 ஆவது போட்டியாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் லயன்ஸ் களத்தடுப்பை தெரிவுசெய்ய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துடுப்பாட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெய்ல் 77 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து 214 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள 21 ஓட்டங்களால் பெங்களூர் அணி வெற்றியை தனதாக்கியது.

குஜராத் லயன்ஸ் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் மக்கலம் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். போட்டியின் ஆட்டநாயகனாக கெய்ல் தெரிவானார்.

இப் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் 2 புள்ளிகளை பெற்றுக் கொண்ட பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி, ஒட்டுமொத்தமாக 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது. குஜராத் லயன்ஸ் அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg