Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்குமா? – இன்று தீர்மானம்

In இலங்கை
Updated: 05:08 GMT, Apr 19, 2017 | Published: 04:19 GMT, Apr 19, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Risha
GSP

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் முக்கிய கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய கூட்டத்தில், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் மதிப்பீட்டு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன் பின்னரே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படுமென  தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் மே மாதம் முதல் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் காணப்பட்ட கடந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக ஜீ.எஸ்.பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்க நேரிட்டது. எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட சில சாதகமான முன்னேற்றங்களை சுட்டிக்காட்டி, குறித்த வரிச்சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகின்றது.

இது தொடர்பில் ஏற்கனவே பலசுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில், அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து மதிப்பீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg