Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தங்களை தடுப்பதற்கு இலங்கைக்கு உதவுவதாக வியட்நாம் அறிவிப்பு

In இலங்கை
Updated: 04:37 GMT, Apr 19, 2017 | Published: 04:32 GMT, Apr 19, 2017 |
0 Comments
1240
This post was written by : Varshini

கொலன்னாவ – மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவன், அவ்வாறானதோர் அனர்த்தம் எதிர்காலத்தில் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏதாவது உதவிகள் தேவைப்படின் அதனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு ஜனாதிபதியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போதே ஜனாதிபதி டிரன் டய் குவன் மேற்குறித்த வியடங்களை கூறியுள்ளார்.

அத்தோடு, இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும், அரசும் தமது உள்ளங்களால் இலங்கையுடன் ஒன்றாக இணைந்திருப்பதாகவும் வியட்நாம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தமது அனுதாபத்தை பிரதமரிடம் தெரிவித்ததோடு, தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பிரதமர் ரணில் இலங்கை மக்கள் சார்பில் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல அனர்த்தம் காரணமாக தனது வியட்நாம் விஜயத்தை சுருக்கிக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று முற்பகல் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg