Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

In இந்தியா
Updated: 05:41 GMT, Apr 19, 2017 | Published: 05:07 GMT, Apr 19, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Shailu
high court

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தவேண்டுமென, மாநில தேர்தல் ஆணையகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு குறித்து தொடரப்பட்ட வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையகம் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு, விசாரணையை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்

தி.மு.க.வின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, முறையான அறிவிப்பை வெளியிட்டு உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன்படி டிசம்பருக்குள் புதிய அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலை நடத்துமாறு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், மாநில தேர்தல் ஆணையம் மேன்முறையீடு செய்ததால், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg