Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பில் ஒரு த்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு

In உலகம்
Published: 05:34 GMT, Apr 19, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்காவில் பெருந்தெருக்கள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் என்பனவற்றை உருவாக்குவது தொடர்பில் சுமார் ஒரு த்ரில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள கெனோஷா நகரில் சர்வதேச வானொலிச் சேவை ஒன்றிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதை உக்குவிக்கும் வகையிலான நிறைவேற்று ஆணைப்பத்திரம் ஒன்றில் கைச்சாத்திடும் பொருட்டே கெனோஷாவுக்கு ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த வானொலிச் சேவைக்கு ட்ரம்ப் அளித்த செவ்வியின் போது, அவரிடம் வடகொரியா தொடர்பான கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “வடகொரியாவின் நடவடிக்கைகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய அனைத்து அதிகாரமும் சீனாவிடம் உண்டு. இருப்பினும், நாம் எப்போதும் அக்கறையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg