Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்லயில் தொற்றுநோய் பரவும் அபாயம்! – மீட்புப் பணி தொடர்கிறது

In இலங்கை
Updated: 04:55 GMT, Apr 19, 2017 | Published: 04:53 GMT, Apr 19, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
meethodamulla

அண்மையில் குப்பைமேடு சரிந்து விழுந்து அனர்த்தத்திற்கு உள்ளான கொலன்னாவ – மீதொடமுல்ல பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நாட்டில் அண்மைய காலமாக டெங்குநோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறித்த பகுதியில் டெங்கு நுளம்புகள் உருவாகுவதைத் தடுப்பதற்கு நுளம்பு ஒழிப்புப் புகை விசிறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளதோடு, மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை பிலியந்தலை, கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாகக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு கஸ்பெவ நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg