Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

In டெனிஸ்
Updated: 05:47 GMT, Apr 19, 2017 | Published: 05:39 GMT, Apr 19, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Shailu
Djokovic

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோல்வியடைய செய்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸிற்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் இடம்பெற்று வருகிறது.

இதில் 2ஆம் நிலை வீரரும், முன்னாள் சம்பியனுமான நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றில் பிரான்சின் ஜிலெஸ் சிமோனை நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்கொண்டார்.

2 மணித்தியாலங்கள் மற்றும் 31 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg