Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஏறாவூர் இரட்டை படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

In
Updated: 06:47 GMT, Apr 19, 2017 | Published: 06:17 GMT, Apr 19, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Risha
asa1

ஏறாவூர் இரட்டை படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இரட்டை படுகொலை வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி தாயொருவரும் அவரது மகளும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, அவர்களது நகைகள் உட்பட பெறுமதிவாய்ந்த பொருட்கள் கொலையாளிகளால் திருடிச்செல்லப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg