Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘Kapruka’ உடன் இணைந்து HNB வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை

In வணிகம்
Updated: 06:49 GMT, Apr 19, 2017 | Published: 06:23 GMT, Apr 19, 2017 |
0 Comments
1199
This post was written by : Surenth

ஹற்றன் நெஷனல் வங்கி, தனது உயர் தரம் வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு 12X7 அணுகுதலை அளிக்கும் வகையில் ‘Club’ அல்லது ‘Priority Cirecle’ மூலமாக, தனிப்பட்ட உதவியாளர் ஒருவரை வைத்திருப்பது போன்று ஒரு எண்ணம் வரும் வகையில் வியத்தகு வரவேற்பு சேவைகளை வழங்க உள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய இலத்திரனியல் வர்த்தக மற்றும் ஒன்லைன் பரிசுப் பொருட்கள் வரை பரந்த அளவிலான வர்த்தகத்தை மேற்கொள்ளும் ‘Kapruka’ உடன் ஹற்றன் நெஷனல் வங்கி இணைந்துள்ளது.

ஹற்றன் நெஷனல் வங்கியின் ‘Club’ மற்றும் ‘Priority Circle’ வாடிக்கையாளர்கள் www.hnpshop.lk என்ற இணையத்தளம் மூலமாக இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஹற்றன் நெஷனல் வங்கியினால் வழங்கப்படும் இந்த தனிப்பட்ட வரவேற்பு சேவைகள், வாடிக்கையாளர்களுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் தனிப்பட்ட தேவைகள் தொடர்பான விபரங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதோடு, குறித்த இணையத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேவை தேர்ச்சி பெற்ற குழுவொன்று இயங்குவதோடு இணையத்தளத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் சிறந்த பொருட்களை உரிய முறையில் விநியோகிப்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg