Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை அ.தி.மு.க.விலிருந்து நீக்குவது, தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: ஓ.பி.எஸ்

In இந்தியா
Published: 08:07 GMT, Apr 19, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Shailu
Panneerselvam-Sasikala

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான சசிகலாவின் குடும்பத்தை அக் கட்சியிலிருந்து நீக்கவிருப்பது, தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க-வை மக்கள் இயக்கமாக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அவரது கொள்கைப்படி தொண்டர்களை அம்மா ஜெயலலிதா வழிநடத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் கட்சியானது, சசிகலாவின் குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே தர்ம யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதன்படி தொடர்ந்து மக்களுடைய எண்ணப்படியும், தொண்டர்களின் விருப்பத்தின் படியும் அறப்போராட்டம் வலுப்பெறும். அ.தி.முக எப்போதும் தொண்டர்கள் இயக்கமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg